2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான மாவட்ட கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம், கேகாலை மாவட்ட செயலாளர் திரு. கே. ஜீ. எஸ். நிஷாந்த அவர்களின் தலைமையில் 2026.09.30 ஆம் திகதி கேகாலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் உபகுழுவில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள், கடந்த கால கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பான பின்தொடர்வு நடவடிக்கைகள், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் சுருக்க அறிக்கைகள் தொடர்பான பரிசீலனை, பொது கணக்குகள் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றத்தைப் பின்தொடர்தல், உள்ளகக் கணக்காய்வு நடவடிக்கைகளைப் பின்தொடர்தல், கணக்காய்வாளர் நாயகத்தினால் முன்வைக்கப்பட்ட கணக்காய்வு வினாக்கள் தொடர்பான பின்தொடர்தல் நடவடிக்கைகள் மற்றும் செயற்பாட்டு மீளாய்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. எதிர்காலத்தில் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது முறையான பின்தொடர்வு பொறிமுறையைப் பேணுவதுடன், அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளைச் சரியாக அடையாளம் கண்டு, குறித்த திட்டங்களின் எதிர்பார்க்கப்படும் நோக்கங்களை அடைவதற்கு ஏற்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வது பொருத்தமானது என முன்மொழியப்பட்டது.

திறைசேரியின் ஊடாக திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், திட்டங்களின் முன்னேற்றத்தை துரிதப்படுத்துவதற்காக ஆர்வத்துடனும் நெருக்கமான பின்தொடர்வுடனும் செயற்படுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. 2026 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்தி அத்திட்டங்களின் முன்னேற்றத்தை அடைவதற்கு வருட இறுதிவரை மேலும் சுமார் மூன்று மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், குறித்த திட்டங்களைத் தொடர்ச்சியாகப் பின்தொடர்ந்து அவற்றின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

மேலும், அஸ்வெசும மற்றும் முதியோர் கொடுப்பனவுகள் வழங்குதல் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் சிரமங்களைத் தீர்ப்பது தொடர்பிலும் இக்குழுவின் இறுதி மீளாய்வின் போது கவனம் செலுத்தப்பட்டது.

பிரதான உள்ளகக் கணக்காய்வாளரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இம்மாவட்ட கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் உதவி கணக்காய்வாளர் நாயகம் கே. எம். சி. கரன்னாகொட, எச். என். ஜயசிங்க – பிரதான கணக்காளர் (கேகாலை மாவட்ட செயலகம்), எஸ். ஏ. என். ஆர். சுபசிங்க – பிரதான உள்ளகக் கணக்காய்வாளர் (உள்நாட்டலுவல்கள் அமைச்சு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு), பி. ஆர். ரணசிங்க – பிரதிப் பணிப்பாளர் (முகாமைத்துவம் – கணக்காய்வுத் திணைக்களம்), என். எம். பி. விக்ரமசிங்க – உதவி கணக்காய்வாளர் நாயகம் (தேசிய கணக்காய்வு உப அலுவலகம் – கேகாலை), டபிள்யூ. டி. ஐ. ஜயவர்தன – பிரதான உள்ளகக் கணக்காய்வாளர் (மாவட்ட செயலகம்), மேலதிக மாவட்ட செயலாளர்களான திருமதி குசும் பண்டார (நிர்வாகம்) மற்றும் திரு. திலீப் நிஷாந்த (காணிகள்), உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்), பிரதிப் பணிப்பாளர் (திட்டமிடல்), அனைத்து பிரதேச செயலாளர்கள், கேகாலை உதவி உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் கேகாலை உதவி காணி ஆணையாளர் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.