இதன்போது கடந்த குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், பிரதேச மட்டத்தில் செயற்படுத்தப்படும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை மேம்பாட்டுக் குழுக்களின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டது. அத்துடன், மாவட்டக் குழுவிடம் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மேலும், பிரதேச மட்டத்தில் கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்குக் கிடைக்கக்கூடிய காணிகள் மற்றும் தொழில்முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
கேகாலை மாவட்டத்தில் பிரதேச மட்டத்தில் புதிய கைத்தொழில்களை உருவாக்குதல் மற்றும் உற்பத்தித்திறன் கிராமங்களை உருவாக்குதல் தொடர்பான முன்மொழிவுகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன. இதற்குத் தேவையான பொறிமுறையொன்று ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கைத்தொழில்துறையினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடையாளம் காண்பதற்கான முறையான பொறிமுறையொன்றை உருவாக்குவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் போது, கைத்தொழில்துறையினர்களின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளை உரிய முறையில் பெற்றுக்கொண்டு விரிவாகக் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மேலதிக மாவட்டச் செயலாளர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், கைத்தொழில் அமைச்சரான சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் இணைப்புச் செயலாளர், சிறு வணிக அபிவிருத்திப் பிரிவின் உதவிப் பணிப்பாளர், கேகாலை மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



















